கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (29) மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
115 ஆண்களும் 101 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 41 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் ஐவரும் மரணித்துள்ளனர்.
அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,991 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435,107 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,394 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 371,992 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 54,340 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.