கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கொரோனா மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு செய்த போது 88 பேரில் 84 நபர்கள் டெல்டா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 201 நபர்கள் டெல்டா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டாக்டர் சந்திம ஜீவந்தரா கூறினார்.
டெல்டா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு பகுதியிலிருந்தும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, வவுனியா, மாலபே மற்றும் கம்பஹா பகுதிகளிலிருந்தும் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
இலங்கையில் காணப்படும் டெல்டா வைரஸில் மூன்று பிறழ்வுகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், இது வைரஸ் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிலைமை எதிர்காலத்தில் நாட்டில் ஒரு புதிய கொரோனா வகையை உருவாக்க வழிவகுக்கும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)