சவூதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அயல் நாடான ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் போரிட்ட சவூதி தலைமையிலான கூட்டணி இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அபா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்க முயன்ற இரண்டாவது ட்ரோன் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கூட்டணியின் அதிகாரபூர்வ அல் - எக்பாரியா தொலைக்காட்சி சேவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெளியான தகவலின்படி, எட்டு பேர் காயமடைந்ததுடன் ஒரு சிவில் விமானம் சேதமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.