உள்ளூர் சந்தையில் கார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நாட்டிற்கு கார்களை இறக்குமதி செய்வதற்கான தடை மற்றும் மேலுமொரு வருடத்திற்கு இறக்குமதி மீதான தடையை அமல்படுத்தியதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சந்தையில் பயன்படுத்திய கார்களின் விலை 100% இற்கு, அதிகமாக உயர்ந்துள்ளது.
2019 இல் தயாரிக்கப்பட்ட டொயோட்டோ பிரிமியோ தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
2019 ஆண்டு டொயோட்டோ ஆக்ஸியோ காரானது 12 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், 15 வயதுக்கு பழமையான ஆக்ஸியோ 65 இலட்சத்திற்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
ஐந்து வருட பழமையான விட்ஸ் காரும் சுமார் 9 மில்லியன் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுடைய வெகன்ஆர் 65 இலட்சம் ரூபா வரம்பில் உள்ளது.
இதற்கிடையில், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுடைய மூன்று சக்கர வாகனம் ரூ. 16-17 இலட்சம் விலையில் கிடைக்கிறது.
சராசரி மோட்டார் சைக்கிள் ரூ. 400,000 வரம்பில் உள்ளது, மேலும் ஸ்கூட்டர்கள் அதை விட அதிகமாக விற்கப்படுகின்றன. (யாழ் நியூஸ்)