அமெரிக்காவில் நான்கு மாத குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து செலுத்தப்பட்டதன் மூலம் ஏற்பட்ட பக்கவிளைவால் உடல் முழுவதும் முடி வளர்ந்து வருகின்றது.
அமெரிக்கா நகரில் உள்ள Texas பகுதியை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு கை, கால், இடுப்பு என எல்லா இடங்களிலும் முடி வளர்ந்து வருகின்றது. குழந்தைக்கு பிறக்கும் பொழுதே Congenital Hyperinsulinism என்ற நோய் இருந்துள்ளது.
ஒரு நாள் குழந்தைக்கு தொடர் நடுக்கம் ஏற்பட்டதால் உடனடியாக பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நோயால் உடலில் இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கப்பட்டு இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும் அபாயம் உள்ளது.
இதனால் மேட்டியோ டெக்சாஸ் என்ற மருத்துவமனையில் குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்து செலுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இரண்டு வாரங்களில் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இருப்பினும் முதலில் குழந்தையின் முகத்தில் இலேசாக முடி வளர தொடங்கியுள்ளது. அது நாளடைவில் குழந்தையின் கால், கை என அனைத்து இடங்களிலும் பரவி குட்டி கொரில்லா போல் தோற்றம் அளித்துள்ளது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர்கள் குழந்தைக்கு மொட்டை அடித்துவிடலமா என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். ஆனால் அப்படி செய்தால் மேலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.