முடக்கல் நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் உழைக்கும் குடும்பங்களிற்கு 2,000 ரூபாய் போதுமானதல்ல என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய நெருக்கடிகளின் மத்தியில் தொடர்ச்சியாக நிதி சலுகைகளை வழங்க வேண்டிய பாரிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஊரடங்கு காரணமாக பெருமளவு மக்கள் சுமைகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய மூன்று முடக்கலின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 5,000 ரூபாயை வழங்குவதற்கு அரசாங்கம் 80 பில்லியனை வழங்கியது, மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு அரசாங்கம் 2,000 ரூபாயை வழங்குகின்றது அரசாங்கத்தினால் இதனை மாத்திரமே செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.