தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை, பலவந்தமாக கடத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தனது தொழிற்சங்கம் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்யும் என்றும் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு இணையவழி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பில்லியன் கணக்கான ரூபாய் இழப்பீடு கோரியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். (யாழ் நியூஸ்)