சமீபத்தில் இறக்குமதியை நிறுத்திய “லாஃப்ஸ்” எரிவாயு நிறுவனத்தின் நுகர்வோரை ஈடுசெய்ய போதுமான உள்நாட்டு எரிவாயு இருப்பு இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா உறுதியளித்துள்ளது.
கடன் கடிதங்களை (எல்.சி) திறப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் இழப்புகள் அதிகரிப்பதினால அனைத்து இறக்குமதியையும் நிறுத்த லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் முடிவு செய்தது.
எல்.சி.க்களை திறக்க வங்கிகளில் போதுமான டொலர்கள் இல்லாததால், உயரும் டொலர் வீதத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக நிறுவனம் முன்பு வெளிப்படுத்தியது.
நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 20% நுகர்வோரை ஈடுகட்ட போதுமான இருப்பு இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா அறிக்கையொன்றில் தெரிவித்தது.
எந்தவொரு நிறத்திலும் அனைத்து வகையான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கும் எரிவாயுவை வழங்கும் என்று லிட்ரோ கேஸ் லங்கா மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது எரிவாயு சிலிண்டர்களின் தேவையான இருப்புக்களை வைத்திருப்பதாக கூறியுள்ள இந்நிறுவனம், எதிர்காலத்திலும் எரிவாயுவினை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என்று உறுதியளித்த லிட்ரோ எரிவாயு, இது தொடர்பாக தேவையற்ற முறையில் பீதியடைவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லிட்டர் சிலிண்டர் உள்நாட்டு திரவ பெட்ரோலியம் (எல்பி) எரிவாயு ரூ. 1,150 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று அறிவித்தார்.
இந்த விலை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)