முஸ்லிம்களின் உரிமையினை பறிக்க துணைப் போகும் வகூப் சபை உயர் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் உரிமையினை பறிக்க துணைப் போகும் வகூப் சபை உயர் அதிகாரி!

முஸ்லிம்களின் வணக்கங்களில் ஒன்றாகிய மேலான உளூஹீயாவை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேலையில், பள்ளி வாசல்களில் உளூஹீயா நிறைவேற்றக் கூடாது என்ற ஒரு சுற்று நிரூபத்தை வகூப் சபையின் உயர் அதிகாரி வெளியிட்டுள்ளார். Covid 19 சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டுள்ள இவ் அறிக்கையானது,

நமது உரிமைகளுக்கு நாமே மண்னை வாரிப் போட்டது போன்ற ஒரு நடவடிக்கையாகும்.

பள்ளி வாசல்களில் ஜும்ஆ கடமை உற்பட, நாட்டில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என அத்தனை விடயங்களும் உறிய சட்டங்களை பேணி நடைபெறும் இவ்வேலையில், அந்நியர்களின் மத்தியி்ல் சர்சைக்குறிய இவ்வணக்கத்தை சந்தர்பம் பாரத்து விட்டுக் கொடுப்பது இவ்வேலையில் சகலச் சிறந்தல்ல.

மக்கள் இதை பெற்றுக் கொள்வதற்கான நேர, தூர, சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தி, அத‌ற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அல்லது ஊர்களில் நிவாகிகள் மட்டும் வீடுகளுக்கு பகிர்ந்தளிப்பதன்

முலம் இதை ஒரு முறையான விதத்தில் நடை முறைப்படுத்தி இருக்கலாம்.

பள்ளிவாசல்களில் உளூஹீயா அறுப்பதில் இதுவரை எந்தப் பிரச்சினையும், எங்குமே ஏற்படவில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் இவ்வேலையில், பள்ளி வாசல்களில் உளூஹீயா அறுப்பதை ஏதோ ஒரு பூதாகரமான பிரச்சனையாக சித்தரித்து, இனவாதிகளின் கண்களுக்கு அதை கோடிட்டு காட்டி, அதை தடை செய்ததை உடநடியாயக வாபஸ் வாங்க வேண்டும்.


வகூப் சபையும் முஸ்லிம் கலாச்சார அமைச்சும் பெளத்த கலாச்சார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இச் சந்தர்பத்தில், ஒரு அரச அதிகாரியாக இருந்து செயற்படும் இவர்,

தனது மேலதிகாரிகளை திருப்திப் படுத்தவே மார்க்க கடமைகளில் கைவைத்துள்ளார். இவ்வாறான ஒரு அறிக்கையை இவர் வெளியிட முன் இதை முஸ்லிம் சமூகத்துடன் ஆயிரம் முறை கலந்தாலேசனை செய்திருக்க வேண்டும்.

இவ்வாறாக விட்டுக் கொடுக்கும் உறிமைகளை நாம் மீளப் பெற முடியாது. என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். சமூகத்தின் தலைமை பதவிகளில் இருந்து கொண்டு

உரியவர்களிடம் பேசி, மார்க்க கடமைகளின் முக்கியத்துவங் களையும், அதன் தாற்பரியங்களையும் அந்நியர்களுக்கு உணர்த்தி, மார்க்க உரிமைகளை பெற்றுத்தர வேண்டியவர்கள்

அதை காப்பாற்ற வேண்டியவர்கள், இப்பதவிகளில் இருந்து கொண்டு இதை இல்லாதொழிக்க முயற்சி செய்யும் இவர்களின் செயற்பாடு இனவாதிகளின்

செயற்பாடுகளைவிட பெரிய ஆபத்தானவையாகும். முஸ்லிம் அமைச்சராக ஒருவரை பதவியில் அமர்த்தி சூற்சகமாக முஸ்லிம் உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகிறதோ, அது போன்ற ஒரு செயலாகவே இதையும் பார்க் வேண்டியுள்ளது. எமது சமூகத்தின் உறிமைகளையும் கடமைகளையும் இவர்கள் இதன் பிரகும் பாது காத்துத் தருவார்கள் என்பதில் என்ன நிச்சயம்.

பள்ளிவாசல்கள் சம்பந்தமாக பூரண அதிகாரம் பள்ளி வாசல் களுக்கு இருந்தாலும், மார்க்க வணக்க வழிபாடுகள், பாரம்பறிய உறிமைகளை பொறுத்தவறை வகூப் சபையின் உயர் அதிகாரிக்கு

தன்னிச்சையாக முடிவுகளை எட்ட முடியாது. அதை சமமூகமே தீர்மானிக்க வேண்டும்.

கொழும்பு உற்பட நாட்டில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில், அனைத்து நகர சபைகளிலும்

பிரதேச சபைகளிலும் இதற்கான பிரோரனைகள் நிறைவேற்றப்பட்டு, இதற்கான ஒழுங்கு ஏற்பாடுகளை, அனுமதிகளை வழங்க தீர்மானித்துள்ள நிலையில், இடையில் புகுந்து இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட்டது மிகவும் துரதிர்ஷ்ட வசமானதாகும்.

உளூஹீயா விடயம் நகர சபைகளினதும் பிரதேசசபை களினதும் அதிகாரமாக இருந்தாலும், பள்ளி வாசல்களின் பூரண அதிகாரம் வகூப் சபையின் அதிகாரத்தில் உள்ளவை. இது சம்பந்தமாக வகூப் சபை மறுக்குமாயின் அதை மீற முடியாது. உளூஹீயா கொடுக்கும் அனைவரது வீடுகளிலும் அதற்கான இடவசதிகள் இருக்கும் என்பதில் நிச்சயமில்லை.

எனவே இது போன்ற முடிவுகளை எடுக்கும் தலைமை பதவியில் உள்ளவர்கள் முதலில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

அரசியல் தலைமைகளுக்கும் அரசுக்கும் வக்காலத்து வாங்கி ஒரு தலைவர் சாம்பலுக்கு மார்கத்தில் இல்லாத ஆதாரத்தை காட்டினர். இவர் தனது பதவியில் உள்ள உயர் நிலையில் உள்ளவர்களை திருப்திப்படுத்துவதற்காக பள்ளி வாசலில் உளூஹீயா அறுப்பதை தடை செய்கிறார் ஆக மொத்த்தில் நம்மவர்களே நமக்கு சாபமாக அமைகின்றனர்.

எனவே இவர் தனது அதிகார காலத்தில் இந்த உரிமைக்கு சாவு மணி அடித்து விட்டுச் செல்லாமல் இதை வாபஸ் வாங்கி இதை பாதுகாத்து விட்டுச் செல்ல வேண்டும். 

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.