நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொள்ளாது, சந்தர்ப்பம் பார்த்து முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான முறையில் செயற்படும் வகூப் சபையின் உயர் அதிகாரி தேவையற்ற பிரச்சினை ஒன்றை திறையிட்டிருக்கின்றார். இப்படியான ஒரு கால கட்டத்தில் சந்தர்பம் பார்த்து இவ்வாறான பிரச்சினைக் குறிய ஒரு அறிக்கையை விட்டதன் பின்னனி என்பதில் முஸ்லிம் சமூகத்தின் அவதானம் தேவை.
இவரின் அறிக்கையைத் தொடர்ந்து , உள்ளூராட்சி மாகான சபைகள் அமைச்சினால் மாடறுப்பை தடுக்கும் கட்டளை ஒன்று சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்களின் வணக்கங்களில் ஒன்றாகிய உளூஹீயாவை நிறை வேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுமா என்ற ஒரு பதட்டமான நிலை முஸ்லிம் சமூகத்தினுல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியாக ஒரு உளூஹீயா பிரானியை வாங்கி உளூஹீயா கொடுக்க வசதியற்ற மக்கள்,
பள்ளி வாசல்களில் கூட்டாக சேர்ந்து உளூஹீயாவை நிறைவேற்றும் சந்தர்பம், மற்றும் அந்நிய மக்களை அயலவர்களாக கொண்ட மக்கள், இதுவரையில் பள்ளி வாசல்களை மையமாகக் கொண்டு உளூஹீயாவை நிறைவேற்றிக் கொண்ட மக்களும், இம்முறை உளூஹீயாவை நிறை வேற்றிக் கொள்வதில் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக சில சகோதரர்கள் உளூஹீயாவை முற்று முழுதாக கை விடவேண்டிய நிலைக்கு உள்ளாகலாம். இதற்கு அல்லாஹ் விடம் இவர்களே பொறுப்புக் கூறல் வேண்டும்.
இதற்கான காரணமாக, இவர் பல ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களை முன்வைத்துள்ளார்.
பள்ளி வாசகள் மடறுக்கும் இடமல்ல. பள்ளிவாசல்களின் தூய்மைக்கு பங்கம் ஏற்படுகின்றது, என்ற முட்டால் தனமான வாதங்களையும் முன்வைத்துள்ளார்.
பள்ளி வாசல்களில் இதுவரை மாடுகளை அறுத்தால் இன ஒற்றுமைக்கு எது வித பங்கமும் ஏற்பட்டதில்லை.
பள்ளி வாசல் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு மத்திய நிலையம்.
பள்ளி வாசல் என்பது தொழுகைக்காக மட்டும் உரிய இடமல்ல. ரஸூலுல்லாஹ்
காலத்தில் சமூகத்தின் அனைத்துப் பனிகளும் பள்ளி வாசலை மையமாகக் கொண்டே நடைபெற்றது. ரஸூலுல்லாஹ் பள்ளி வாசலை சமூகத்தின் அனைத்துப் பனிகளுக்குமான
மத்திய நிலையமாக நடாத்திக் காட்டினார்கள்.
வெள்ளம், மண்சரிவு போன்ற விளைவுகளின் போது, மக்கள் பள்ளி வாசல்களில் தஞ்சமடைவதாலும் , அதற்கான வழி வகைகளையும் பொருள்களையும் பள்ளி வாசல்களை மையமாகக் கொண்டு பகிர்ந்தளிப்பதனால், பள்ளி வாசல்கள்
அகதி முகாம்களாக ஆகிவிடுவதில்லை. ரமாலான் மத கஞ்சிகளும் இதர விஷேடங்களின் போதும், உணவுகளும் அன்னதானங்களும் வழங்குவதானால்
பள்ளி வாசல்கள் தன்ஸல் நிலையங்களாக மாறி விடுவதில்லை. தற்போது அனைத்துப் பள்ளி வாசல்களிலும் ஜனாஸா பெட்டிகள் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக பள்ளி வாசல்கள் பிரேதப் பெட்டிக் கடைகளாக மாறி விடவுமில்லை.
பள்ளி வாசால்கள் என்பது சமூக விடயங்கள், மார்க்க விடயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை பதவிகளில் இருந்து அறியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக தான்தோன்றித்தனமாகவும், அதி பிரசங்கித்தனமாகவும், தன்னிச்சைப்படியும் இவ்வாறான அறிக்கைகளை விட, தனி ஒரு அதிகாரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. சமூக முக்கியஸ்தர்கள் சமூகத்தின் முக்கிய பிரதி நிதிகளின் அலோசனைகளை நடாத்திய பின்பே இவ்வாறான முடிவுகளுக்கு வர வேண்டும்.
இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இதற்கு முன் இந்தப் பொறுப்புக்களில் பலர் இருந்துள்ளனர். இவ்வாறாக அருவருக்கத்தக்க விதமாக எவரும் நடந்து கொள்ளவில்லை.
முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்டவர்களாலும், பல்வேறுபட்ட கோணங்களில் இருந்தும் பழி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக் கால காட்டத்தில், இதுவும் முஸ்லிம் சமூகத்தை சந்தர்பம் பார்த்து பழி வாங்கும், 100%மான பழிவாங்கல் நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது. மேலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும்இவ்வேலையில் இவரது செயற்பாடானது முஸ்லிம் சமூகத்தை மேலும் ஒரு பிரச்சினைக்குள் தள்ளும் நடவடிக்கையாகவும் இதை பார்க்க வேண்டியுள்ளது.இவரது செயற்பாட்டின் பின்னி என்ன என்பதையும், இவரது செயற்பட்டில், திறைக்குப் பின் இவர் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக, சதி ஒன்றின் சக்தியாக செயல் படுகிறாரா என்பதையும் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் ஆராய வேண்டும்.

( பேருவளை ஹில்மி )