இலங்கையில் மீண்டும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது நாளாந்தம் 1,700க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில் நாட்டில் நேற்று மாத்திரம் 1,815 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 30 பேரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,785 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 293,113 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 265,708 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.