தமது கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முன் தனது கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரும்பினால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் மற்றையவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாம் அரசாங்கத்துடன் இணைந்த ஒரு கட்சி என்றாலும், இன்று நாம் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளோம், எனவே கிராமபுர கட்சி உறுப்பினர்களுக்கு இதனை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் சுதந்திர கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)