தனிமைப்படுத்தல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

போராட்டங்கள் அலையாக திரண்டுள்ளமையின் நோக்கத்தை நன்கு அறிவோம். சுகாதார தரப்பினரது கோரிக்கைகளுக்கு அமையவே போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளனர்.

ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது. பொது மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஆகவே தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும். 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதில் மாற்றமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் தற்போது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார்கள். போராட்டம் அலை போல் திரண்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

பேச்சு சுதந்திரம், மற்றும் ஒன்று கூடல் ஜனநாயக உரிமையாக காணப்படுகிறது. இதனைஇவர்கள் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் பூகோள மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தை நாமும் தற்போது எதிர்க் கொண்டுள்ளோம்.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக ஒன்று கூடல் மற்றும் போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் கடந்த வாரம் நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணான வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். பொது சுகாதார சேவை அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமையவே அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தனை தவறு என எவராலும் குறிப்பிட முடியாது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல விடயங்களையும், முக்கிய பண்டிகைகளையும் கொண்டாடாமல் தியாகம் செய்துள்ளார்கள். பண்டிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் எவரும் வீதிக்கிறங்கி போராடவில்லை.

தற்போதைய போராட்டங்கள் குறுகிய நோகக்ங்களை அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது. போராட்டகாரர்கள் எல்லை மீறி செயற்பட்டதன் காரணமாகவே பொலிஸார் அவர்களை கைது செய்தார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் போராட்டத்தை அடக்கிய வகையில் நாம் செயற்படவில்லை. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டமை சுகாதார தாரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே இடம் பெற்றது. ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு ஒரு சிலரது பொறுப்பற்ற செயற்பாட்டினால் ஒட்டு மொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. தனிமைப்படுத்தல் சட்டம் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் செயற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.