இரண்டாவது கொரோனா தடுப்பூசி இடப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் சர்வதேச பயணிகள் இப்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தாத மற்றும் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதோடு, முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
நாட்டுக்கு வருகை தருபவர்களினது பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை பாதுகாப்பான ஹோட்டலில் 24 மணி நேரம் தங்குதல் அவசியமாகும்.
முதல் நாள் பி.சி.ஆர் சோதனை அறிக்கை எதிர்மறையாகுமிடத்து (கொரோனா தொற்று இல்லை), பயணிகள் ஹோட்டலில் இருந்து வெளியேறி அவர்களின் விடுமுறையை அனுபவிக்க முடியும். சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் அவர்கள் மீண்டும் ஏழாம் (7) நாளில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மேலும், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருந்து கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். அத்துடன், இலங்கை சுற்றுலா வலைத்தளம் வழியாக மின்னணு பயண அங்கீகாரத்தை (ஈ.டி.ஏ) பெற வேண்டும் மற்றும் கோவிட் காப்பீட்டு திட்டமும் பெற்றிருத்தல் வேண்டும்.
ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்ட அல்லது தடுப்பூசி பெற்றிராத பயணிகள் 14 நாட்கள் வரை பாதுகாப்பான ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது, தடுப்பூசி நிலை மற்றும் தங்கியிருக்கும் காலத்தைப் பொறுத்து மாறுபடும்.
எவ்வாறாயினும், சில நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கின்றது. கடந்த 14 நாட்களில் இந்தியா, தென்அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, லெசோதோ, நமீபியா, சுவாசிலாந்து மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளுக்கு பயண வரலாறு (போக்குவரத்து உட்பட) உடைய பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)