தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டவாறு பலருக்கு தடுப்பூசியை செலுத்திய சுகாதார அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டவாறு பலருக்கு தடுப்பூசியை செலுத்திய சுகாதார அதிகாரி!

மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 1 இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் ஏற்றப்படுகின்றது.

அந்த நிலையில் மட்டக்களப்பு கல்லடியில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை பேசியவாறே பலருக்கு தடுப்பூசி ஏற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சுகாதார பரிசோதகர் ஊசி ஏற்றுவதில் தனது கவனத்தைச் செலுத்தாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஊசி ஏற்றியதன் காரணமாக அங்கு தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட யுவதி அழுதுகொண்டு வெளியேறியமையினை காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துளள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவும் தாய் ஒருவருக்கு ஒரே கையில் இரண்டு ஊசிகள் போடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருக்கும் நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பில் தொலைபேசியில் பேசியவாறு தடுப்பூசி ஏற்றியமை பலரிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார பரிசோதகரின் அசமந்தப் போக்கு காரணமாக ஒட்டுமொத்த சுகாதார பரிசோதகர்களுக்கும் ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் இவரது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதுடன், சுகாதாரத்துறை மீது மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.