நாட்டின் ஜனாதிபதியின் சம்பளத்தை விட 40 மடங்குக்கும் அதிகமான தொகையைப் பெற்ற அரச நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.
அரச நிறுவனத்துடன் இணைந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் அவர் மாதமொன்றிற்கு கிட்டத்தட்ட ரூ. 4 மில்லியன் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து சமீபத்தில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது தொடர்பில் பொறுப்பான அமைச்சரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்ட தலைவர் மற்றொரு அரச நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பதவியைப் பெற்ற பின்னர் மாதத்திற்கு சுமார் 4 மில்லியன் ரூபாய் சம்பளம் பெற்ற நபருக்கு ரூ. 250,000 வரை கொடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் சுமார் ரூ. 4 மில்லியன் சம்பளத்தைப் பெறுகையில், நாட்டின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ. 97,500 மாத்திரமே. (யாழ் நியூஸ்)