- கடந்த 15 நாட்களுக்குள் இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நேற்று (23) முடிவடைந்த கடைசி 15 நாட்களில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 611 ஆக பதிவாகியுள்ளது, இதில் 353 ஆண்கள் மற்றும் 258 பெண்கள் அடங்குவர்.
- கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று காரணமாக 30 வயதிற்குட்பட்ட 5 நபர்கள் இறந்துள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மேலும் இக்காலகட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 147 பேர் இறந்துள்ளனர்.
- கடந்த 15 நாட்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் 459 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு இலக்காகி வயதானவர்களுக்கு தொடர்ந்து இறப்பு ஆபத்து அதிகம் என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- நாட்டில் இதுவரை 4,002 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
- இவற்றில், முதல் அலையில் 13 இறப்புகளும், இரண்டாவது அலைகளில் 596 இறப்புகளும் தற்போதைய மூன்றாவது அலையில் 3,393 இறப்புகளும் பதிவாகியுள்ளன. (யாழ் நியூஸ்)