ஆடவர் உலகக்கிண்ண 2027 மற்றும் 2031ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2024 முதல் 2030 ஆம் அண்டு வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற உள்ள T20 உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
தற்போது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் 10 அணிகள் பங்கேற்பதுடன், இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர்களில் 16 அணிகள் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.