போதைப்பொருள் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 24 சந்தேக நபர்களுக்கு எதிராக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 13 பேர் அடங்கலாக பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்களில் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் அனைவரையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.