GSP வரிச்சலுகை என்றால் என்ன? இலங்கைக்கு ஏன் இது வழங்கப்பட்டது? நீக்க ஏன் பிரேரணை முன்வைக்கப்பட்டது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

GSP வரிச்சலுகை என்றால் என்ன? இலங்கைக்கு ஏன் இது வழங்கப்பட்டது? நீக்க ஏன் பிரேரணை முன்வைக்கப்பட்டது?


GSP வரிச்சலுகை என்பது General System of Priority இலகு பெயர், அல்லது சுருக்கப் பெயராகும் இவ்வரிச் சலுகை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியுள்ள விஷட வர்த்தக முன்னுரிமைத் திட்டமாகும். இவ்வுரிமை வழங்கப்பட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றிணைந்த நாடுகளுக்கு அந்நாட்டின் இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை இலங்கையில் இருந்து அல்லது GSP சலுகை பெற்ற நாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்ய முடியும்.

அதாவது இவ்வாறான நாடு ஒன்றில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது அங்குள்ள இறக்குமதித் தீர்வையை அங்குள்ள இறக்குமதியாளர்செலுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாக நமது நாட்டு உற்பத்திக்கு அந்நாட்டு இறக்குமதியாளர்களுக்கு குறைந்த செலவும் சந்தையில் விலைக் குறைவின் காரணமாக, கூடுதலான கேள்வியும் ஏற்படுகின்றது.

இச்சலுகை கிடைக்கப் பெற்ற ஒரு நாடு சுமார் 7,500 வகையான பொருட்களை அந்நாட்டின் இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக சந்தர்ப்பமாக இது வழங்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவி என்ற அடிப்படையில் இலங்கை உற்பட பல நாடுகளுக்கு இச்சலுகையை வழங்கியுள்ளது.

இதில் இலங்கை, பாகிஸ்தான், பிலிபைன், உற்பட சில வறிய பின்தங்கிய நிலையில் உள்ள ஆபிரிக்க நாடுகளும் உள்ளடங்குகின்றன.

இச்சலுகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் நாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின்
நிபந்தனைகளை ஏற்று அவற்றை கடைப்பிடித்து மதித்து நடப்பதன் மூலம் இச்சலுகையை பெற்று தொடர்ந்தும் காத்துக் கொள்ளலாம்.

இவ் ஒப்பந்தமானது சட்டம், இன ஒற்றுமை, சம உரிமை, மனித உரிமைகள் உற்பட இன்னும் பல ஆம்சங்களைக் கொண்டதாகவும்
காணப்டுகிறது.

இதன் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு இந் நிபந்தலைகளுக்கு கீழ் படிந்து நடக்கும் ஒப்பந்தத்திற்கு கைசாத்திட்டு GSP வரிச்சலுகையை இலங்கை பெற்றுக் கொண்டது.

இதன் முலம் இலங்கை வருடந் தோறூம் சுமார் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான அந்நிய செலாவணியை இலங்க வருமாணமாக பெற்றுக கொள்கிறது. அத்தோடு சுமார் 100,000 மேற்பட்ட நேரடி வேலை வாய்புக்களையும், இன்னும் பல ஆயிரம் மறைமுக வேலை வாய்புக்களையும் பெற்றுக் கொள்கிறது. மேலும்
Raw Material இறக்குமதி போன்ற வற்றிற்கான இறக்குமதி கப்பல் துறை போன்ற வருமாணங்களையும் பெற்றுக் கொள்கிறது.

மேலும் GSP வரிச்சலுகை இலங்கைக்கு இருப்பதானால் இச் சலுகையை பயண்படுத்தி European Market பயன்படுத்துவதன் மூலம்
தமது Business Investment செய்துகொள்ள வெளிநாட்டு மூதலீட்டாளர்கள்
முன் வந்தனர். இதனால் வெளிநாட்டு முதலீடுகளும் இலங்கையில் அதிகரித்தது. இலங்கையில் வெளிநாட்டு மூதலீட்டாளர்கள் படையெடுப்புக்கு GSP முக்கிய காரணமாகும்.

அதேவேலை நமது இலங்கை போன்ற நாடுகளுக்கு இதை ஒரு சலுகை அடிப்படையில் வழங்கினாலும்
சர்வதேச அடிப்படையில் ஒரு வர்த்தக ஏகபோகத்தை ஐரோப்பிய நாடுகள் தன்னகதே வைத்திருப்பதும்
ஒரு நோக்கமாகும்.

GSP வரிச் சலுகையில் அடிப்படையில் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் ஐரோப்பிய நாடுகள் இப் பொருட்களை தாமாக உற்பத்தி செய்ய முற்படுமாயின் இதன் அந்த நாடுகளின் High Labor Cost உடன் ஒப்பிடும் போது பொருற்களுக்கான விலையில் சுமார் பத்து முதல் இருபது வரையிலான விலை அதிகரிப்பை கொடுக்க வேண்டி ஏற்படும்.

மறுபுரம், தமது நாடுகளின் தேவைக்கு, தேவையான பொருட்களை சீனா போன்ற வர்தக நாடுகளின் ஏகபோகத்தில் தங்கி நிற்காமல்
தமது European Market business ஸை காப்பாற்றிக் கொள்வது, மற்றும் சீனா போன்ற நாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு போட்டியாக இருப்பதனால் இவ்வரிச் சலுகையை வளரும் நாடுகளுக்கு அளிப்பதன் மூலம் சீனாவுக்கு எதிரான ஒரு வர்தக உலகத்தை உருவாக்குவதும் ஐரோப்பிய நாடுகளின் ஒரு தந்திர உபயமாகும் எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் எமது நாடு GSP சலுகையை இழக்குமாயின்
மேற்கூறிய அத்தனை வருமாணங்களும் வேலை வாய்ப்புக்களும் தலைகீழாக மாறுவதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தத்தமது முதலீடுகளை வேறு வேறு வரிச்சலுகை உள்ள நாடுகளுக்கு நகர்த்த முற்படுவார்களாயின் இதனால் எமது நாடு பாரிய இழப்பை எதிர் நோக்க வேண்டி ஏற்படும்.

மேலும் நாட்டிற்கு அந்நிய செலாவணி பிரச்சினை டொலர்க்கு எதிரான ரூபாவின் வீழ்சி, இதனால் டொலர் இன் பொருமதி அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி போன்ற பாதிப்புக்களை
பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்.

இதற்கு முன்னரும் GSP வரிச்சலுகையை நீக்கிக் கொள்ளும் பிரேரனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசின்
தாழ்மையான வேண்டுகோளின் அடிப்படையில், புரிந்துணர்வுகளின் அடிப்படையிலான மனித உரிமை மீள் கட்டி எழுப்புதல் போன்ற கால அவகாசத்தின் நிபந்தனைகளின் கீழ் கால அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் 2010 ஆம் ஆண்டு GSP வரிச்சலுகை நீக்கப்பட்ட போதிலும் மீண்டும் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி மாற்றத்தின் பின் மீண்டும் 27 கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு இச்சலுகை வழங்கப்பட்டது. இதில் மனித உரிமைகள் முக்கய வலியுறுத்தலாக காணப்பட்டது.

GSP வரிச்சலுகை ரத்துச் செய்யப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதற்கு ஏற்ற தரப்படுத்தலுடன் (Quality Control) உடனான பொருற்களை தயாரித்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும் நாம் தயாராக உள்ளோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அமெரிக்கா சீனா உடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டபோது, அமெரிக்காவில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் மூலப் பொருற்களுக்கான விலையை அதிகரித்ததோடு,
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருற்களுக்கான வரியையும் அமெரிக்கா அதிகரித்து, சீனவை எதிர்பாராதவிதமாக அமெரிக்கா கையாண்டது.

தற்போதய நிலையில் ஐரோப்பிய நாடுகள் சீனாவுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐரோப்பிய நாடுகளை கடுமையாக தாக்கியுள்ள கொரோனா பிரச்சினை காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கு சீனாவுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர், இலங்கையில் சீனாவின் தலையீடுகள் பற்றி ஐரோப்பிய நாடுகள் கவனித்து வரும் நிலையில் சீனா உடனான சீற்றம் நம் மீது தீர்க்கப்படுமா?

பெறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

-பேருவலை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.