வைரஸின் B.1.617.2 ஆனது கொரோனா வைரசின் டெல்டா அல்லது இந்திய மாறுபாடு என்று தெரிவித்தார்.
கொரோனா வைரசின் மாறுபாடு B.117 ஐ விட 50% வேகமாக பரவக்கூடிய திறன் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் இயக்குனர் மேலும் தெரிவித்தார்.
இது கொரோனா வைரஸின் மிகவும் கடுமையான மாறுபாடு எனவும், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸைத் ஒழிப்பதற்கு சக்தி வாய்ந்த மாறுபாடாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார.
இதுவே இலங்கையில் கண்டறியப்பட்ட சமீபத்திய கொரோனா மாறுபாடு ஆகும், அல்ஃபா மற்றும் டெல்டா வகைகள் ஏற்கனவே கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாபிட்டிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹாராம, கராபிட்டிய் மற்றும் ராகமை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டிருந்தன. (யாழ் நியூஸ்)