
விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரி மீது மோதிய கார் தொடர்ந்து நிறுத்தாது சென்றுள்ளது.
காயமடைந்த அதிகாரியை சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மற்றைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன், வாகனமும் வத்தலை பொலிஸாரினால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.