இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள நாடு முழுவதுமான பயணத் தடை திங்கட்கிழமை (21) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படும்.
பயணக் கட்டுப்பாடு ஜூன் 23 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் பயணத் தடையானது ஜூன் 25 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 04 மணி வரை தொடரும் என்றும் தெரிவித்தார்.
இக்கால கட்டத்தில் மாகாணங்களுக்கு இடையேயான பிரயாணமும் தடைசெய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் சடுதியாக அதிரத்த கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 21 முதல் இரு தடவைகள் பயணத்தடை அமுலாக்கப்பட்டது.
Updated at 13:57h
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லல், கொழும்பு காலி முகத்துவாரம் போன்ற பொது இடங்களுக்கு செல்லல் இக்கால கட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
மேலும் பொது ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்கள், திருமண நிகழ்வுகள் ஆகியவும் இக்கால கட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(யாழ் நியூஸ்)