ஒன்லைன் முறைமையின் கீழ் மதுபான விற்பனைக்கு இடமளிக்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.
சுகாதார மற்றும் இதர தரப்புகளின் கடும் எதிர்ப்பினையடுத்தே இந்த தீர்மானத்திற்கு அரசு வந்துள்ளது.
முன்னதாக ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால் திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது .