அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சந்திப்பு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையிலே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இடையிலான முதல் முறையாக சந்தித்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.