கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பிரான்ஸ் பயணிக்க முனைந்த 25 வயது பெண்ணொருவர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்லும் விமானத்தில் குறித்த பெண் பயணிக்க முனைந்த வேளையில் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதில் போலி பி.சி.ஆர் சான்றிதழும் காணப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
யாழ் - மாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு சி.ஐ.டியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.