வைத்தியர் என தெரிவித்து தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை வழங்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவ பொலிஸாரால் சந்தேக நபர்கள் நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை பகுதியை சேர்ந்த குறித்த நபர்கள், அப்பகுதியில் உள்ள வைத்தியரின் பெயரினை பயன்படுத்தி இவ்வாறு சிகிச்சை வழங்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பேஸ்புக் பக்கமொன்றை உருவாக்கி இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்துவதாக தெரிவித்து 12 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தே நபர்கள் பயன்படுத்திய வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.