இலங்கை சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பொருந்தக்கூடிய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட (இரண்டு டோஸ்) இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வீடுகளில் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்காவிலிருந்து வருகை மற்றும் பயண வரலாறு உள்ளவர்களுக்கு இந்த வீட்டு தனிமைப்படுத்தல் வசதி பொருந்தாது.
முழுமையாக தடுப்பூசி போடாமல் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் அல்லது அரச தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுலா அடிப்படையில் பயோ பாதுகாப்பு (Bio Bubble) குமிழியின் கீழ் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த நடவடிக்கைகள் பொருந்தாது. (யாழ் நியூஸ்)