கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகள் இறந்த நிலையில் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கப்பல் தீப்பற்றலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே நாட்டின் பல இடங்களில் இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வரும் நிலையிலையே இந்த கடலாமைகள் மூன்றும் இன்று கரையொதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நூருள் ஹுதா உமர்