நாட்டில் நீடிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை இன்று (03) தெரிவித்தார்.
எதிர்வரும் 07ஆம் திகதி பயணக்கட்டுப்பாட்டை நீக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்த போதிலும் அதனை 14 ஆம் திகதிவரை ஒத்திவைக்க நேற்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், பயணக்கட்டுப்பாட்டினை தளர்த்தும் திகதி பற்றி நாளை அல்லது திங்கட்கிழமை அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.