
நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம், அதனை பொறுப்பேற்று, உரிய அமைச்சர் பதவி விலக வேண்டுமென நேற்றையதினம் (12) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், இன்றையதினம் (13) ஊடவியலாளர் மாநாடொன்றை கூட்டிய வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, குறித்த முடிவு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இணைந்தே எடுத்ததாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

