கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
150 ரூபாவிற்கு இருந்த ஒரு கிலோகிராம் கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலைகள், தற்போது 200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்..
இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் காணப்படுகின்ற கறுவாடுகளுக்கான தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு ஆகியவற்றினாலேயே, விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை சந்தையில் 300 ரூபா முதல் 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்ட ஒரு கிலோகிராம் பலயா கறுவாடு, 500 ரூபா முதல் 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று, 250 ரூபா முதல் 300 ரூபா வரை காணப்பட்ட லீன்னா கறுவாடு, 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. 400 ரூபா முதல் 500 ரூபா வரை காணப்பட்ட ஈரான் காய்ந்த நெத்தலி ஒரு கிலோகிராமின் தற்போதைய விலை, 500 ரூபா முதல் 580 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அதேபோன்று, 400 ரூபா முதல் 500 ரூபா வரை காணப்பட்ட தாய்லாந்து நெத்தலி ஒரு கிலோகிராமின் தற்போதைய விலை, 600 ரூபா முதல் 650 ரூபா வரை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மொத்த விற்பனை விலைவில் கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளமையினால், அவற்றின் சில்லறை விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது