நாடு மூடப்பட்டபோது தவறவிட்ட மற்றும் நிலுவையில் இருந்த பணிகளை இரண்டு வாரங்களுக்கு அவசர அவசரமாக தொடர்ந்து செய்தால், பிறகு சில மாதங்களுக்கு மீண்டும் நாடு முழுவதும் மூடப்பட வேண்டியிருக்கும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
எனவே, இந்த ஆண்டு இறுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க வேண்டுமா அல்லது இரண்டு வாரங்களில் கடினமாக உழைத்து மீண்டும் நாட்டை பூட்டும் நிலைமைக்கு தள்ளப்பட வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், அத்தியாவசியமற்ற பலரை அத்தியாவசிய சேவை கடிதங்களை அனுப்பி அவர்களது நிறுவன தலைவர்களால் வரவழைக்கப்பட்டதாகவும், இம்முறை இந்த சூழ்நிலையை உருவாக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று மாலை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அளித்த பேட்டியில் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)