குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.