மனிதஉரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு தங்களிற்கு அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்கின்றனர் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரு மௌலவிமார்கள் தமது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சட்டத்தரணிக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு இரண்டு மௌலவிகளுக்கும் அதிகாரிகள் அழுத்தங்களை கொடுக்கின்றனர் என தெரிவித்து சட்டத்தரணி எரிக் பாலசூரிய அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இரு மௌலவிகளுக்கும் சட்டத்தரணியை தெரியாது என தனது மனுவில் தெரிவித்துள்ள சட்டத்தரணி, அல்-சுஹிரியா மத்ரசாவில் இரு மௌலவிகளும் தீவிரவாத போதனையில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.