நாளை (03) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள வரும் போது குறித்த கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பு தரப்பினருக்கு காண்பித்து பயனாளர்கள் தபால்/ உப தபால் நிலையங்களுக்கு வர முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.