நாட்டின் சுகாதாரத்துறையை விடவும் பொருளாதாரம் மிக முக்கியமானது! நாட்டை நீண்டகாலம் முடக்க முடியாது! -பவித்ரா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் சுகாதாரத்துறையை விடவும் பொருளாதாரம் மிக முக்கியமானது! நாட்டை நீண்டகாலம் முடக்க முடியாது! -பவித்ரா


வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போல் வருடம் முழுதும் நாட்டை முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் என்னாவது? நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது அவசியமானதே, ஆனால், அதைவிடவும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.


ஒரு நாளைக்கு பிசிஆர் பரிசோதனைகளுக்காக மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாகிறது என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.


கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளில் சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் பயணக்கட்டுப்பாடு குறித்து அடுத்த கட்ட தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். 


அவர் மேலும் கூறுகையில்,


நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்காலிக முடக்கத்தை சாதகமான பெறுபேறுகளாக வெளிப்படுத்தி எம்மால் தொடர்ந்தும் நாட்டை முடக்கி மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அதேவேளையில் மக்களின் நாளந்த வாழ்க்கை முறைமைக்கும் இடமளிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 


இதில் மக்களின் செயற்பாடுகள் பிரதானமானது. மக்கள் தமது பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.


பொறுப்பான மக்களாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல்களை விடுக்க முடியும், கட்டுப்பாடுகளை பிறப்பிக்க முடியும். ஆனால் அவற்றை பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். மக்கள் சட்டத்தை, விதிமுறைகளை மீறுவதானால் அது மக்களையே இறுதியாக பாதிக்கப்போகின்றது.


மேலும் கொரோனா என்பது உலகளாவிய ரீதியில் தாகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு தொற்றாகும், நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு ஒரு அழிவு வந்தது. இப்போது மீண்டும் அவ்வாறான அழிவொன்று ஏற்பட்டுள்ளது. 


இதில் ஏனைய நாடுகளை போன்றே நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே இந்த தாக்கங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. ஏனைய நாடுகளை விடவும் நாம் பாதுகாப்பான நிலையில் உள்ளோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.


-ஆர்.யசி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.