நாட்டின் தனியார் வங்கிகளின் கிளைகள் அடுத்த வாரம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயங்கி வரும் பிரதான தனியார் வர்த்தக வங்கிகளின் அனைத்து கிளைகளும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (07) முதல் வார இறுதி வரையில் அனைத்து தனியார் வங்கிகளினதும் கிளைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவித்தல் வெளியிட்டுள்ளன.
நாட்டின் பிரதானமாக இயங்கி வரும் தனியார் வர்த்தக வங்கிகள் அனைத்தும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.
நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடை உத்தரவினை கருத்திற்கொண்டு இந்த கிளைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.