ஐக்கிய அமெரிக்காவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளுடான விமானம் ஒன்று இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இலங்கைக்கு அவசரகால மருத்துவப் பொருட்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
விஷேட விமானம் ஒன்றின் 6 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கையில் சுகாதாரத் துறைக்கு 880,000 பாதுகாப்பு ஆடைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இதய துடிப்பை அளவிட 1,200 Oximeters வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.