ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜப்தீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகக் கடந்த 10 வருடங்களிற்கு மேல் இவர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்சிக் காலத்தின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையினாலேயே ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜப்தீன், தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.