எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர் தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பது பயனற்ற செயற்பாடாகும். நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என்பதை எதிர் தரப்பினர் நன்கு அறிவார்கள். பொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருந்தால் பொருளாதார மட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதை தொடர்ந்தே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்ற விவகாரம் இன்று அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இவ்விடயம் குறித்து கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். இது பயனற்ற செயற்பாடாகும். எரிபொருள் விலையேற்றத்தை அதிகரிக்கும் தீர்மானம் வலு சக்தி அமைச்சருக்கு கிடையாது என்பதை எதிர்தரப்பினர் நன்கு அறிவார்கள். அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியாது என்றார்.