இன்று (17) காலை புத்தூர் - நிலாவரை வீதி வழியாக சென்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க குறித்த நபரே இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.
அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.