கோப்புப் படம் |
9 வயது சிறுமி ஊஞ்சல் கயிறு இறுகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் மதியம் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கழுத்தில் கயிறு சிக்குண்டு மயக்கமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இடம் போதாமை காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் எனவும் இவரே மூத்த பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.