அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் அலுவலகங்களில், செய்தியாளர் சந்திப்புகளின் போது மற்றும் பிற நிகழ்வுகளில் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இப்போது டெல்டா வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படுவது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் முகக்கவசம் அணியாமல் தவறான சமிக்ஞையை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதை காணலாம் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சில பொது நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் ஊடக நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தமை மற்றும் சமூக இடைவெளியை பராமரிக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது, இது பொதுமக்களுக்கு தவறான சமிக்ஞையை எடுத்துச் சென்றுள்ளது என்று இலங்கை சுகாதார கல்வி அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.
அதேபோன்று அவர்கள் பேஸ்புக்கில் அல்லது பிற சமூக வலைத்தளங்களில் முகக்கவசம் இல்லாமல் அல்லது சமூக இடைவெளி பேணாமல் குழு புகைப்படங்கள் எடுத்து பதிவிடுகிறார்கள் என்றும் சங்கம் குறிப்பிட்டு இது தொடர்பில் எச்சரித்துள்ளது.
அதேநேரம், இவ்வாரம் கொழும்பு - தெமட்டகொடை பகுதியில் பெறப்பட்ட ஐந்து மாதிரிகளிலிருந்து உலகில் அதிக அளவில் பரவும் B1.617.2 மாறுபாடு (டெல்டா) கண்டறியப்பட்டது. (யாழ் நியூஸ்)