தொற்று நோய்ப் பிரிவின் பிரதானியை அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொற்று நோய்ப் பிரிவின் பிரதானியாக நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சுதத் சமரவீர கடமையாற்றி வருகின்றார்.
அவருக்கு பதிலீடாக வேறும் ஒர் தொற்றுநோயியில் நிபுணரை அந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொக்டர் சுதத் சமரவீரவை அந்தப் பதவியிலிருந்து அகற்றினாலும் அவரது சேவை மூப்பினை கருத்திற் கொண்டு வேறு ஓர் பொருத்தமான பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் தொற்று நோய்ப் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மருத்துவதுறைசார் தரப்புக்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.