பேருவலையில் சில பகுதிகளில் மக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு நண்மை கருதி பராட்டாக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு பரோட்டாவின் விலை சுவையான பருப்புக் கறியுடன் விலை 7/= மட்டுமே.
மக்களின் கஷ்டமான நிலையை உணர்ந்து சேவையையும் நண்மையையும் கருதி இப்பகுகளில் உள்ள இளைஞர்களால் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவையானவர்களுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இது ஏனைய பகுதி மக்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
மக்கள் உணவுக்காக கஷ்டப்படும் ஏனைய பகுதிகளிலும் தற்காலிகமாக நண்மை கருதி இவ்வாறான சாப்பாட்டுக் கடைகளை ஆரம்பித்தால் இது மக்களுக்குச் செய்யும் பேருதவியாகும்.
இளைஞர்கள் தற்போது வீட்டில் ஓய்வாக இருக்கும் காலங்களில் ஒன்று சேர்ந்து இவ்வாறான ஒரு சேவையை மேற்கொண்டால் மக்களின் கஷ்டங்களுக்கு கை கொடுக்கும்.
-பேருவளை ஹில்மி