கொரோனா மரணத்தின் சடலங்கள் தகனம் தொடர்பாக பிரதமருக்கு அவசர கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணத்தின் சடலங்கள் தகனம் தொடர்பாக பிரதமருக்கு அவசர கடிதம்!


வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது உறவினர்களிடம் பணம் அறவீடு செய்யப்படுகின்றமை அம் மக்களிடம் பல்வேறு துயரங்களை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (01) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா" தொற்று தாக்கத்திற்கு உள்ளாகி இறப்பினை தழுவி கொண்டவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

குறித்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யும் இடமாக வவுனியா அமைந்துள்ளது.

வவுனியா நகர சபை ஒருவரை தகனம் செய்ய 7 ஆயிரம் ரூபாவினை அறவிட்டு வருகின்றனர்.

இன்றைய கடினமான சூழலில் வாழும் மக்களுக்கு இந்த தொகையினை வழங்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே மக்களின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.