இவ்வாண்டுக்கான பேரித்தம் பழ விநியோகத்துக்கு என்னவாயிற்று? முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வாண்டுக்கான பேரித்தம் பழ விநியோகத்துக்கு என்னவாயிற்று? முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விளக்கம்!


சவூதி அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ரமழான் மாதத்திற்கு பேரீத்தம்பழம் வழங்குவதுவழமையாக இருந்து வருகின்றது. மேற்படி கிடைக்கப் பெறுகின்ற பேரித்தம் பழங்களை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பது எமது திணைக்களத்தின் ஒரு பணியாகும். எனவே இவற்றிற்காக அரசாங்கம்வருடா வருடம் நிதி ஒதுக்கி வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் 22 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 


அத்துடன் வழமைக்கு மாறாக இம்முறை சவூதி அரசாங்கம் 75 மெட்ரிக் தொன் பேரித்தம் பழங்களை மாத்திரமே வழங்கியுள்ளது. இது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே மேற்படி கிடைக்கப்பெற்ற பேரித்தம் பழங்களை விநியோகிப்பதற்காக ஆலோசனைக்கூட்டம் ஒன்றை திணைக்களம் ஏற்பாடு செய்தது.


அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் விபரம்.


திணைக்களம் சார்பாக


1. ஏ பீ எம் அஷ்ரப் (பணிப்பாளர்)


2. எம் எல் எம் அன்வர் அலி (உதவிப் பணிப்பாளர்)


3. ஏ ஏ எம் அஸ்ரின் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்)


4. ஜே கே ரஷீத் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)


பிரதமர் அலுவலகம் சார்பாக


1. பர்சான் மன்சூர் (முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர்)


2. ஹஸன் மௌலானா (முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு பொறுப்பான புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர்)


மேற்படி கலந்துரையாடலில் தீர்வாக


1. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொருபெட்டி (20 கிலோ கிராம் கொண்ட) பேரீத்தம் பழங்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.


2. மிகுதி பேரித்தம் பழங்களை வறுமையான மாவட்டங்களை அடையாளம் கண்டு இருக்கும் தொகைக்கேற்ப ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் வீதம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.


3. சவூதி தூதுவராலயம் கேட்டுக்கொண்டதற்கிணங்க 4,000 கிலோ கிராம் பேரிச்சம்பழம் தூதராலயத்துக்கு வழங்கப்பட்டது.


வறுமையான மாவட்டங்கள் (புள்ளிவிபர திணைக்களத்தில் இருந்து பெறப்பட்டது)


1. மொனராகலை

2. மாத்தறை

3. ஹம்பாந்தோட்டை

4. முல்லைத்தீவு

5. கிளிநொச்சி

6. புத்தளம்

7. அனுராதபுரம்

8. வவுனியா

9. யாழ்ப்பாணம்

10. பதுளை


மேற்படி தீர்மானத்தின்படி பேரித்தம் பழ விநியோகம் மேற்கொண்டு வரும்போது,


வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுக்கு 26,400 கிலோகிராம் பேரீத்தம்பழம் சவூதியில் இருந்து கிடைக்கப் பெறுவதாக தெரிவித்தனர். இவற்றை திணைக்கத்திற்கு அன்பளிப்பு செய்வதாகவும் அவற்றினை வன்னி தேர்தல் மாவட்டங்களான மன்னார் வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு பாகிர்ந்தளிக்குமாறும் வேண்டிக் கொண்டார் . 


மேற்படி பேரித்தம் பழங்களை திணைக்களத்தின் நிதியில் தீர்வை செய்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூலம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு வினியோகிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான திறைசேரி அனுமதியும் கிடைக்கப் பெற்றது.


அத்துடன் மினுவாங்கொடை மற்றும் அட்டுளுகம பள்ளிவாசல்களுக்கு அவர்களது கிராமங்களுக்கு ஒவ்வொரு கிலோ கிராம் பேரீத்தம்பழம் வழங்கக் கூடிய அளவு பேரீத்தம்பழம் கிடைக்க பெறுவதாக தெரிவித்தனர். அவர்களும் திணைக்களத்தின் நிதியில் தீர்வை செய்து தருமாறு வேண்டிக் கொண்டனர். 


மேற்படி கிடைக்கப்பெற்ற சுமார் 6,000 கிலோகிராம் பேரீத்தம் பழங்கள் திணைக்களத்தின் சுமார் ரூபா 6 லட்சம் செலவில் செலவு செய்து திணைக்கள அதிகாரிகள் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.


அதன் பிரகாரம் சவுதி அரசாங்கத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற 75 மெட்ரிக் டொன் பேரீத்தம் பழங்கள் முதல்கட்டமாக வறுமையாக அடையாளம் காணப்பட்ட


1. மொனராகலை 3,600 K.g.

2. மாத்தறை  8,020 K.g.

3. ஹம்பாந்தோட்டை 5,500 K.g.

4. கிளிநொச்சி 340 K.g.


மாவட்டங்களுக்கு ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு ஒரு கிலோ கிராம் வீதம்  வழங்கப்பட்டது.


அத்துடன் அடுத்து அடையாளம் காணப்பட்டு புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்கள் வறுமையானஅடையாளம் காணப்பட்ட மாவட்டங்களாக இருந்த போதும் அவற்றின் முஸ்லிம் குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால் அவற்றுக்கு வழங்குவதற்கு போதுமான தொகை பேரீத்தம் பழங்கள் இல்லாததன் காரணமாக அடுத்த மாவட்டமான யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கும் மிகுதி தொகை பதுளை  மாவட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


அதன் பிரகாரம்,


1. யாழ்ப்பாணம் 1,360 KG

2. பதுளை 6,200 KG (பதுளை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு சுமார் 400 கிராம் வீதம்பேரீத்தம்பழம் வழங்கப்பட்டுள்ளது)  வழங்கப்பட்டது .


அத்துடன் எஞ்சிய மாவட்டங்களான கீழ்வரும்


மாவட்டங்களுக்கு பதியப்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொரு பெட்டிகள்(20 KG கொண்ட)  வீதம் வழங்கப்பட்டது.


1. கொழும்பு (164*20KG)

2. கம்பஹா(97*20KG)

3. களுத்தறை  (102*20KG)

4. கண்டி (287*20KG)

5. மாத்தளை (63*20KG)

6. நுவரெலியா (40*20KG)

7. காலி(57*20KG)

8. மட்டக்களப்பு (157*20KG)

9. அம்பாறை (267*20KG)

10. திருகோணமலை (208*20KG)

11. குருநாகல் (206*20KG)

12. புத்தளம் (200*20KG)

13. அனுராதபுரம் (112*20KG)

14. பொலன்னறுவை (41*20KG)

15. இரத்தினபுரி (65*20KG)

16. கேகாலை (111*20KG)


கிடைக்கப்பெற்ற பேரீத்தம் பழங்களில் 72,560 KG பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கப்பட்டன. மீதி 2,440 KG பேரீத்தம் பழங்களில்,


1. சில பெட்டிகள் பழுதடைந்ததாக காணப்பட்டது.

2. சில பெட்டிகளில் 20KG இற்கு  குறைந்து காணப்பட்டன .

3. சில பெட்டிகள் சுங்கத்தீர்வை யில் பரிசோதிப்பதற்காக எடுக்கப்பட்டன.


இதுவரை இவற்றுக்காக செலவழிக்கப்பட்ட தொகை 15 மில்லியன்கள் ஆகும். 


இவற்றை விநியோகிப்பதற்காக சதோச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன அவற்றுக்கான கொடுப்பனவுகள்இன்னும் வழங்கப்படவில்லை.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 

18.06.2021


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.