ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்திற்கு சிறப்பு பொலிஸ் குழுவொன்று திடீரென விரைந்துள்ளது.
கொழும்பு – வத்தளை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கே மேற்படி குழுவினர் இன்று (17) காலை விஜயம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் கூட்டமொன்று நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்தே பொலிஸார் இவ்வாறு விரைந்திருக்கின்றனர்.
இருந்த போதிலும் அங்கு அப்படியான கூட்டம் நடைபெறாததை தொடர்ந்து பொலிஸார் அங்கிருந்து திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.