பிரான்ஸ் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.
அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது அந்நாட்டின் பிரஜை ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார்.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்து அதிபரை பின்னே இழுத்து தூர அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபரை அறைந்த காரணத்தை விளக்கியுள்ளனர்.
அதிபர் பின்பற்றும் நட்டின் பொருளாதார கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மக்கள் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும், இதனால் தான் அதிபரின் கன்னத்தில் அரைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
-பேருவலை ஹில்மி